News Just In

8/12/2021 11:47:00 AM

ஏறாவூர் ஐயங்கேணி மிஹ்ராஜ் வீதி ஒரு கோடியே அறுபத்து மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு...!!


அரசாங்கத்தின் "சுபிட்ஷத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தின் ஓர் அங்கமான ஒரு இலட்சம் கிலோமீட்டர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் தலைவருமான அல்ஹாஜ் அல்ஹாபில் கௌரவ நசீர் அஹமட் அவர்களின் முயற்சியின் பலனாக கிராமிய வீதி அபிவிருத்தி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் ஐயன்கேணி மிஹ்ராஜ் வீதி ஒரு கோடியே அறுபத்து மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (11) பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களினால் வைபவ ரீதியாக அடிக்கல் நடப்பட்டது.

இவ்வீதியானது ஐயங்கேணி கிராம சேவையாளர் பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய வீதியாகும், பாடசாலை மற்றும் மாடுகள் அறுக்கும் மனை என்பன அமைந்துள்ளதால் பருவ பெயர்ச்சி மழை காலங்களில் பொதுமக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தி இருந்தது. இவ்வீதியானது ஐயங்கேணியையும் மீராகேணியையும் இணைப்பதில் குறைந்த தூர அளவினை கொண்டதாகும். இதில் அமைந்துள்ள பாலமும் புனரமைப்பு செய்யப்படுவதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளர் எம்.ஐ தஸ்லிம் ,முன்னாள் தவிசாளரும் இணைப்பு செயலாளருமான ஏ.ஏ.நாசர் ஆசிரியர், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எஸ்.எம் ஹிதாயத்துள்ளாஹ், ஐயங்கேணி கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், என்.எம் வாஹிட் (RI), ரஹிம் மௌலவி, ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் கொள்கை பரப்பு செயலாளர் ஜே.ஏ ஜாவாத் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐயங்கேணி பிரதேச மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









No comments: