News Just In

8/24/2021 08:15:00 PM

முடக்கத்திலும் முடங்காத மக்கள்...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் நேற்றைய தினம் (23) தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கொரோனாத் தொற்று அதிகரித்துக் காணப்படுவதால் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கிப் பொதுமக்களை வீதிக்கு வராமல் வைக்க பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

பொலிஸாரின் கருத்துப்படி அநேகமான அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களுடைய உத்தியோகபூர்வ அடையாள அட்டையைக் காட்டி வீதிக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க சகல திணைக்களத் தலைவர்களும் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் வேலைக்கு அழைக்கும் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலை உள்ளடக்கிய கடிதத்தை வழங்கவேண்டுமெனவும் அவ்வாறு அப்பட்டியலில் உள்ளடக்கப்படும் உத்தியோகத்தர்களை மாத்திரமே வெளிச்செல்ல அனுமதி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பழைய மருத்துவச் சீட்டை காட்டி அதிகளவிலான பொதுமக்கள் வீதிக்கு வருவதாக பொலிஸார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய காலை எட்டு மணி தொடக்கம் இரவு எட்டு மணி வரைக்கும் தான் மட்டக்களப்பில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நேரத்தில் நோயாளிகள் தமது மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

No comments: