News Just In

8/06/2021 10:28:00 AM

பிளாஸ்டர் அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் கிங் கோர்சஸ் அணியை வென்றது...!!


(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக ஆண்டு நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட சீருடை அறிமுக நிகழ்வும், சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியும் சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிங் கோர்சஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில் மத்திய தர வரிசை வீரர்களின் சிறப்பான துடுப்பாட்டத்தின் வாயிலாகவே இந்த ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கிங் கோர்சஸ் விளையாட்டுக்கழகம் சார்பில் றியாஸ்-34 ஓட்டங்களையும், பயாஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட 142 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர் விளையாட்டுக் கழக அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் றிழ்வான் 59 ஓட்டங்களை குவித்ததுடன் மூன்றாவது விக்கட்டுக்கான துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடிப்பாடினர். இதில் ஆபாக் 52 ஓட்டங்ககளை பெற்றார். இதனால் சிறப்பாக விளையாடிய விளாஸ்டர் விளையாட்டுக் கழக அணி15.5 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தனர். இந்த சுற்றுத்தொடரின் ஆட்ட நாயகனாக விளாஸ்டர் விளையாட்டுக் கழக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் றிழ்வான் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஆபாக் தெரிவானார்.

இந்நிகழ்வில் டவுன் ட்ரவல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜலீல், லீடர் அஸ்ரப் வித்தியாலய பிரதியாதிபர் ஏ.எம்.ஏ. நிஸார், சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். ஸஹருதின், இளைஞர் சேவை அதிகாரி எம்.டீ.எம். ஹாரூன், சாய்ந்தமருது கிரிக்கட் சங்க நிர்வாகிகள், விளாஸ்டர் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments: