News Just In

7/17/2021 07:25:00 PM

மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஏழு பாடசாலைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தொடு கணனிகள் வழங்கி வைப்பு...!!


நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மாணவர்களிடையே மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள ஏழு பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான (டப்) தொடு கணனிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி.க.அகிலா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினரும் மட்டககளப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் போது
1. கரடியனாறு மகா வித்தியாலயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 06 பேருக்கும், மாணவர்கள் 50 பெருக்குமாக 56 கணனிகளும்.
2. மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தை சேர்ந்த 06 ஆசிரியர்களுக்கும், 43 மாணவர்களுக்குமாக 49 கணனிகளும்.
3. நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த 06 ஆசிரியர்களுக்கும், 50 மாணவர்களுக்குமாக 56 கணனிகளும்.
4. அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தை சேர்ந்த 05 ஆசிரியர்களுக்கும், 43 மாணவர்களுக்குமாக 48 கணனிகளும்.
5. மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தை சேர்ந்த 05 ஆசிரியர்களுக்கும், 43 மாணவர்களுக்குமாக 48 கணனிகளும்.
6. அரசடித்தீவு விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தை சேர்ந்த 06 ஆசிரியர்களுக்கும், 43 மாணவர்களுக்குமாக 49 கணனிகளும்.
7. கொக்கட்டிச்சோலை RKM வித்தியாலயத்தை சேர்ந்த 06 ஆசிரியர்களுக்கும், 43 மாணவர்களுக்குமாக 49 கணனிகளும்
என 07 பாடசாலைகளை சேர்ந்த 40 ஆசிரியர்களுக்கான கணனிகளும், 315 மாணவர்களுக்கான கணணிகளுமாக 355 கணனிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















No comments: