News Just In

7/17/2021 05:59:00 PM

காரைதீவு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் படுகாயம்...!!


(நூருள் ஹுதா உமர்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் காரைதீவு கமநல சேவைகள் காரியாலயத்திற்கு முன்பாக இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments: