News Just In

7/24/2021 03:00:00 PM

கறுப்பு யூலை தமிழ் இனப் படுகொலைதமிழர்களுக்கு விடுத்த எச்சரிக்கையாகும்- முறியடிப்பதற்கு தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படுவோம்!!


EPRLF பத்மநாபா மன்றத்தின் தலைவர் இரா.துரைரெட்ணம் அவர்களின் ஊடக சந்திப்பு இன்று மதியம் EPRLF அலுவலகத்தில் நடைபெற்றது இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழின படுகொலையை நிறைவேற்றி 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அக் காலப் பகுதியில் தமிழர்கள் நிரந்தரமாக வாழ்ந்த, நிரந்தர வாழ்வாதார கட்டமைப்பைக் கொண்ட, கலாசார அடையாளங்களைக்
கொண்ட, கல்வியில் ஆளுமை பதித்த, தமிழர்கள் தலைமமைத்துவத்தினால் ஆளுமை செலுத்திய, பொருளாதார கட்டமைப்புள்ள இடங்களை அடையாளப்படுத்தி அழித்து, எரிக்கப்பட்டும், இடம் பெயர வைத்தும், வெட்டி கொலை செய்தும், கடத்தி கொலை செய்தும், காணாமலாக்கப்பட்டும், தமிழர்கள் வாழ்ந்த தென்னிலங்கைப் பகுதியிலேயே அகதிகளாக்கப்பட்டும் தமிழர்களின் தளங்கள் ஸ்ரீலங்கா அரசினால் இல்லாமலாக்கப்பட்டன.

பலமான இவ் தமிழின அழிப்பிற்கு யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி, தபால் பெட்டி சந்தியில் யூலை 23ந் திகதி அன்று 13இராணுவ வீரர்கள் கன்னி வெடியில் கொல்லப்பட்டதை வைத்துக் கொண்டு யூலை 24ந் திகதி கொழும்பிலுள்ள கனத்தை மயானத்தில் 13 சடலங்களையும் நல்லடக்கம் செய்வதற்கு திட்டமிட்டு இக் கொலையைக் காரணம் காட்டி சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அன்றைய J.R ஜெயவர்தன ஜக்கிய தேசிய கட்சி அரசு சிங்கள மக்களுக்கான படுகொலை என சித்தரித்து காடையர்களை தூண்டி விட்டு இனப் படுகொலையை செய்து முடித்தது. இவ் அழிவிலிருந்து ஸ்ரீலங்கா அரசு எச் சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாக்க முயற்சிக்கவில்லை.

38 ஆண்டுகள் கடந்தும் கறுப்பு யூலை தமிழின கொலை வெறி தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மறைக்கப்பட முடியாதவை. இதன் தொடர்ச்சியாக இன்றுவரை நடைபெற்ற தமிழினத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட பல கறுப்பு யூலைகள் நிகழ்ந்தேறிவிட்டன. இப்படிப்பட்ட தமிழினத்திற்கொதிரான இனவாத அரசின் செயற்பாடுகளை தடுத்த நிறுத்த தமிழர்களாகிய நாங்கள் ஓரணி திரள்வோம்.

02. தென்னிலங்கை பகுதியில் டயகம என்ற பிரதேசத்தை சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஒரு சிறுபான்மை தமிழராக இருந்து கொண்டு ஒரு மலையகத்தைச் சேர்ந்த ஒரு 18 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தியது என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலாகும்

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த மீறல் தொடர்பாக அவருடைய உற்றார் உறவினர்கள் கூட இந்தக் கொலையில் சந்தேகம் நிலவுகின்றன என கூறுகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் உடந்தையாக இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற இந்த நிலையில் முழு இலங்கைவாழ் மக்களினதும் ஏகோபித்த ஆதரவும் இந்த மனித உரிமை தொடர்பான சந்தர்ப்பங்களில் இருக்கும் வேளையில் இலங்கை அரசாங்கம் எந்தச் சந்தர்ப்பத்திலும் இதனை மூடி மறைக்கக் கூடாது.

இது சிறுவருக்கு நடந்த ஒரு துஷ்பிரயோகம் பெண்களுக்கு எதிராக நடந்த ஒரு துஷ்பிரயோகம் திட்டமிட்டு மலையக மக்களுக்கு நடந்த ஒரு துஷ்பிரயோகம் தமிழினத்துக்கு நடந்த ஒரு துஷ்பிரயோகம் இந்த விடயங்களை மிகவும் தெளிவாக அந்த பகுதியில் உள்ள சமூகம் வெகுஜன ரீதியான போராட்டங்களை நடத்தி அது அரசியல் கட்சி பிரதிநிதிகளாக இருக்கலாம் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம் தொழிற்சங்க பிரதிநிதிகளாக இருக்கலாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வடக்கு-கிழக்கு கூட இந்த கொலையை கண்டித்து ஒரு ஆட்சேபணையினை தெரிவிக்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இதனை மூடிமறைக்காமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

03. மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை மேய்ச்சல் தரை தொடர்பாக செங்கலடி பிரதேச செயலகப் பிரிவு கிரான் பிரதேச செயலகப் பிரிவு மிகவும் திட்டமிட்டவாறு அண்ணளவாக இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 80 - 85 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தமிழர்களின் ஆளுமையின் ஆளுமையில் இருந்து எடுத்து ஏனைய மாவட்டங்களுடனம் ஏனைய மாகாணங்கள் உடனும் சேர்ப்பதற்காக மாதவன மய்லத்தமடுவில் எடுக்கப்பட்ட முயற்சி அந்த சங்கங்களின் பயனாகவும் மக்களின் பிரதிகளின் பயனாகவும் ஓரளவு தடுக்கப்பட்டு சட்டத்துக்கு முன் கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதிகளை கபளீகரம் செய்வதற்காக பல வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் தங்களை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தருணத்தில் இலங்கை இராணுவத்தால் கடந்தவாரம் அப்பகுதிகளில் சென்று கால்நடை பணியாளர்களுடன் அழுத்தம் திருத்தமாக அப்பகுதிகளை பிரதேசங்களையும் பயிற்சி முகாமாக மாற்ற போகின்றோம் என்று சொல்கின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 30 தொடக்கம் 35 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பகுதிகளில் உள்ள இடங்களை மாவட்ட அரச நிர்வாகம் மேய்ச்சல் தரைக்கென விவசாயக் கூட்டங்களில் இடங்களைக் கூறி இந்த இடங்களில் கால்நடைகளை கொண்டு செல்லலாம் என அரசாங்கத்தால் மேய்ச்சல் தரைக்கெனன அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி செயலாளர் பிரிவு கிரான் பிரதேச செயலாளர் பிரிவு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலகங்களால் திட்டமிட்ட விவசாய அமைப்புகளால் திட்டமிட்ட முகாமைத்துவ குழுக்களால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் வந்த இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள பல இடங்கள் கால்நடைகளுக்கு என அடையாளப்படுத்தப்பட்டு பெயர் சொல்லப்பட்டு கால்நடைகள் இடம்மாற்றுவது வழமையாக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

அப்படிப்பட்ட இடங்களை பேணிய ராணுவமும் ஏனைய மாகாணத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இடத்தை பயன்படுத்த வேண்டுமானால் அந்த இடத்தை அந்தப் பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் உள்ள காணிப் பயன்பாட்டு குழு அனுமதித்தே ஆக வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் தரப்பைச் சேர்ந்த இரண்டு மக்கள் பிரதிநிதிகள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கின்ற நிலையில் அந்த இரண்டு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இடங்கள் எவ்வாறு மற்றவர்களுக்கு கை மாறப்போகின்றது அனுமதி இல்லாமல் ஏன் அவர்கள் கபளீகரம் செய்கின்றார்கள் என்றால் பிரதேச அபிவிருத்தி குழுவில் ஒரு தீர்மானம் மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அப்படி அல்ல தெரிந்தும் வழங்குவதற்கு உடந்தையாக இருக்கின்றார்களா அப்படியானால் மக்கள் வாக்களிப்பு நூலாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அணையுங்கள் என்று கேள்வி கால்நடை பணியாளர்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இருக்கின்றது ஆகவே தயவு செய்து கிட்டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் அந்த பகுதியில் உள்ளதன் காரணத்தால் அந்தப் பகுதிகள் மேய்ச்சல் தரைக் என பயன்படுத்தக் கூடிய செயல் வடிவங்களை ஆளும் தரப்பைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் வழங்கவேண்டும் என நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

No comments: