News Just In

7/06/2021 01:49:00 PM

களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம் பக்கதர்கள் எவரும் ஆலயத்திற்குள் வருவதற்கு முற்றாகத் தடை!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
https://youtu.be/IaG4Kzdkp1k
களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் செவ்வாய்கிழமை(06) ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி தீத்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. இவ்வருடம் உற்சவகாலத்தில் பக்தர்கள் எவரும் ஆலயத்திற்குள் வருவதற்கு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

என களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேற்படி ஆலயத்தில் செவ்வாய்கிழமை(07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

உலகளாவிய ரீதியிலும், நமது நாட்டிலும் கொரோனா தொற்று மிகவும் மோசமாக தீவிரமடைந்துள்ள காரணத்தினால், ஆலயம் சார்ந்து மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டியுள்ளது. எனவே ஆலய உற்சவம் ஆரம்பிக்கப்படும் நாளிலிருந்து திருவிழா முடியும் வரைக்கும் ஆலய கடமைகளுக்காக 15 பேர் மாத்திரம்தான் ஆலயத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஏனைய எவரும் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே பக்தர்கள் இந்நிலமையைக் கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வருவதை முற்றாகத் தவித்துக் கொள்ளவும். வரவேண்டாம் என மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும் இக்காலத்தில் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்தால் அதனூடாக கொரோனோ தெற்று பரவக்கூடிய சந்தர்ப்பம் உள்ளன. அந்த ஒரு கெட்ட பெயர் ஆலயத்திற்கு வரக்கூடாது, அதனைத் தொடர்ந்து கிராமத்திலுள்ள மக்களுக்கும் பின்னர் அந்த பாதிப்பு ஏற்படும், மேலும் இலங்கைககும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வகைய்ல் அரச அறிவுறுத்தல்களுக்கு அமையவும், எமது சுய சிந்தனைகளுக்கமையவும், இம்முறை திருவிழாவை அமைதியாகவும் சிறப்பாகவும் செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். திருவிழா நிகழ்வுகளை சமூக ஊடகங்கள் வாயிலாக நேரடியாக அஞ்சல் செய்ய இருக்கின்றோம். அதனை வீட்டிலிருந்தவாறே தரிசிக்கலாம் என்பதைத் தெரிவிகத்துக் கொள்கின்றோம்.

ஆலய கிரியைகள் செவ்வாய்கிழமை(06) மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்நாபிஷேகம் இரவு 7 மணிக்கு நடைபெற்று தொடர்ந்து வசந்த மண்டப பூஜை, இடம்பெற்று பின்னர் சுவாமி உள்வீதி திருவிழா நடைபெறும். இம்முறை சுவாமி உள்வீதி திருவிழா மாத்திரம்தான் நடைபெறும், மாம்பழத் திருவிழாவும், வெளி வீதி திருவிழாவும் நடைபெறமாட்டாது. 15ஆம் திகதி காலை ஆனி உத்தரத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

எமது ஆலயத்தில் வருடாந்தம் திருவிழாவோடு சேர்ந்து கிராம மக்களும் இந்து இளைஞர் மன்றமும் இணைந்து வருடாந்தம் மாபெரும் அன்னதானம் வழங்குவதும் வழக்கம் இம்முறை பக்தர்களின் வருமை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதனால் அன்னதானம் வழங்கும் செயற்பாடும், ஏனைய பெரிய நிகழ்வுகள் எதுவும் இம்முறை ஆலயத்தில் நடைபெற மாட்டாது என்பதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.




No comments: