News Just In

7/24/2021 07:54:00 AM

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை- 15854பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம்...!!


நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் மாத்திரமின்றி டெங்கு நோய்க்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 15 854 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மாத்திரம் கடந்த ஜூன் மாதம் வரை 1235 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் 491 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஏனைய பல மாவட்டங்களிலும் இவ்வாறு அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின் அடிப்படையில் கடந்த ஜனவரியில் 2122 டெங்கு நோயாளர்களும் , பெப்ரவரியில் 2355 டெங்கு நோயாளர்களும் , மார்ச்சில் 2312 டெங்கு நோயாளர்களும் , ஏப்ரலில் 2241 டெங்கு நோயாளர்களும் , மே மாதத்தில் 1441 டெங்கு நோயாளர்களும் , ஜூன் மாதத்தில் 2997 டெங்கு நோயாளர்களும் , இம்மாதத்தில் கடந்த இரு வாரங்களில் 787 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கு பாதிப்பிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்று சூழலை நுளம்பு பெருக்கம் ஏற்படாத வகையில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: