News Just In

4/11/2021 08:56:00 AM

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!!


இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேரவில் உள்ள அலுவலகங்கள் ஏப்ரல் 12 ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் திறந்திருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

0112-677-877 என்ற இலக்கத்தினூடாக நியமனத்தை உறுதி செய்த பின்னர் பொதுமக்கள் தமக்கான சேவையினை உரிய அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.

மேலதிகமாக முன் நியமனம் செய்தவர்கள் திங்களன்று குருணாகல், கம்பஹா, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய அலுவலகங்களிலும் சேவைகளைப் பெறலாம்.

No comments: