News Just In

3/01/2021 03:37:00 PM

மட்டக்களப்பில் சிறுமியொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இளைஞன் கைது..!!


மட்டக்களப்பு நகர் பாரதி வீதியில் சைக்கிளில் சென்ற சிறுமியின் சைக்கிள் செயின் கழன்றதையடுத்து அதனை பூட்டி அவருக்கு உதவி செய்துவிட்டு சிறுமியின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடிய இளைஞன் ஒருவனை இன்று (01) கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 26 ம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பொலிசார் அந்த வீதியிலுள்ள குடிமனை ஒன்றில் பொருத்தப்பட்ட சிசிரிவி கெமரா மூலம் குறித்த கொள்ளையனை அடையாளம் கண்டதையடுத்து மாமாங்கத்தைச் சேர்ந்த இளைஞனை இன்று (01) கைது செய்ததுடன் தங்கச் சங்கிலியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்டவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: