News Just In

3/01/2021 11:09:00 AM

மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்..!!


மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தலை இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

மாகாணசபை தேர்தலானது விகிதாசார முறைமையின் அடிப்படையில் நடாத்தப்பட வேண்டுமாயின் அதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் கலப்பு முறைமையில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ் எம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

No comments: