News Just In

3/01/2021 12:46:00 PM

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் - அரியநேத்திரனிடம் விசாரணை..!!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பாகவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸாரால் நேற்றுமுன்தினம் அரியநேத்திரனுக்கு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் ஊடாக விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வாகனத்தின் அனுமதிப் பத்திரங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டதாக அரியநேத்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை நான்கு மணியளவில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த தன்னிடம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக இரண்டு மணித்தியாலங்கள் வரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

No comments: