News Just In

1/04/2021 10:19:00 PM

மட்டக்களப்பு மாநகர சபையால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் வெள்ளநீர் வெளியேற்றும் நடவடிக்கை...!!


மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் பல இடங்கள் வெள்ளநீர் நிரம்பி காணப்படுகின்றது. 

வெள்ளநீரை வெளியேற்ற மட்டக்களப்பு மாநகர சபையானது நான்கு குழுக்களாக பிரிந்து துரிதகதியில் செயற்பட்டு வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய வகையில் உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் தலைமையிலான குழுவினர் இன்று மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட கூழாவடி புன்னைச்சோலை, இருதயபுரம், சின்ன ஊறணி, கொக்குவில் ஆகிய இடங்களில் வெள்ளநீர் வெளியேற்ற உடனடியாக செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மழையினால் ஏற்பட்ட வெள்ளநீர் தேங்கிக் காணப்படும் இடங்களில் நீர் வழிந்தோடக்கூடியவாறு உடனடியாக அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவியுடன் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.











No comments: