News Just In

1/05/2021 01:09:00 PM

கொரோனா தொற்று அச்சம்- தனியார் வைத்தியசாலையில் மூடப்பட்டது!!


மத்துகம பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்று மூடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்துகம பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த வைத்தியசாலையின் பணியாளர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தனியார் வைத்தியசாலையில் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் வேறு ஒரு குழுவினரைக் கொண்டு பணிகளைத் தொடருமாறு மத்துகம பிரதேச பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: