இந்த மஞ்சள் தொகை 19 350 கிலோ கிராம் கோதுமை மா எனக் கூறப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு இதன் பெறுமதி 1 550 000 எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும் சுங்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 7500 கிலோ கிராம் மஞ்சள் தூள் மற்றும் 11 850 கிலோ கிராம் கோதுமை மா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
20 அடி நீளமுடைய கொல்கலனுக்குள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொல்கலன் சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான ஆரம்பகட்ட சோதனை நடவகடிக்கைகள் சுங்க திணைக்களத்தின் இடர் மேலான்மை பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முகத்துவாரம் பிரதேசத்திருலுள்ள வியாபாரியொருவரால் இவ்வாறு மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

No comments: