News Just In

12/22/2020 06:43:00 PM

சற்று முன்னர் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய செய்தி...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 618 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 300 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 415 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் 334 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க இதனை தெரிவித்தார்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 715 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் 120 பேரின் PCR மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இதனை எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணம் -கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் இதுவரை 621 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரையிலான காலப்பகுதியில் கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் 235 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை 15 ஆயிரத்து 780 PCR மற்றும் Antigen பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார வலயத்தில் நேற்றைய நாளில் மாத்திரம் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: