News Just In

12/22/2020 07:01:00 PM

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கிய நிலையில்- மாநகர சபை களத்தில்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பல இடங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் தயாபரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள்  ஆகியோர் இன்று மழை நீர் தேங்கியுள்ள பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் வடிகான்களை துப்பரவு செய்து, வடிகான்களை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டு மக்களின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்து உடனடியாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட இருதயபுரம், கல்லடி வேலூர், கூழாவடி, நொச்சுமுனை, கல்லடி போன்ற மிகவும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் துரித கதியில் நீரினை வெளியேற்ற செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்ததுடன் வாடிகான்களை துப்பரவு செய்து, உடனடியாக வடிகான்களை அமைக்க வேண்டிய இடங்களில் வடிகான்களை அமைத்து நீர் வழிந்ததோடும் வகையில் உடனடி நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.


















No comments: