News Just In

12/30/2020 07:45:00 PM

மட்டக்களப்பு- காத்தான்குடி பகுதிக்கு இன்று நள்ளிரவு முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு...!!


மட்டக்களப்பு- காத்தான்குடி சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று உருத்திப்படுத்தப்பட்டுள்ளமையையடுத்து குறித்த பகுதியானது இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் இனங்காணப்பட்டவர்களில் 19 பேர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாகவும் இதனால் காத்தான்குடி பிரதேசத்தில் மொத்தம் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுத்திகளில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக இனங்காணப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: