மக்களுக்கான நிவாரணப்பணிகள் அவசியமான இடத்து உடனடியாக செயல்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கை குழு தயாராகவுள்ளதாக இராஜாங்க அமச்சர் குறிப்பிட்டார்.
கிரான் கொறளைபற்று தெற்கு பிரதேசம் தற்போது துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் போக்குவரத்திற்கு கடற்படையினரின் இயந்திரப்படகுகளும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயந்திப்படகுகளும் சேவையில் உள்ளது.
கொறளைபற்று தெற்கு பிரதேசசெயலக பிரிவுகளில் 6 கிராமசேவகர் பிரிவுகளை சாந்த கொராவெளி, குடும்பிமலை, பெரிலாவெளி, மியாங்கற்குளம், புலிபாய்ந்தகல், பொண்டுகள்சேணை, பூலாக்காடு, முறுத்தாணை, பிரம்படித்தீவு போன்ற 16 கிராமங்களுக்கான போக்குவரத்து பாதைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
No comments: