வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும், கிணற்றுக்குள் மீன்கள் போடும் நடவடிக்கையும், டெங்குபுனை விசிறல் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாெக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு வளாகம் மற்றும் பொது இடங்களுக்கு புகை விசிறல் நடவடிக்கை நேற்று(30) இடம்பெற்றது.
No comments: