News Just In

9/28/2020 01:14:00 PM

மட்டக்களப்பு- வடமுனைக் காட்டில் முதியவரின் சடலம் மீட்பு!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனைக் காட்டிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (28.09.2020) மீட்கப்பட்ட சடலம் கல்குடாவைச் சேர்ந்தவரும் வடமுனையில் வசிப்பவருமான வைரமுத்து நவரெத்தினம் (வயது 61) என்பவருடையது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமையன்று 26.09.2020 வீட்டை விட்டு காட்டுப் பகுதிக்குச் சென்றவர் திரும்பி வராத நிலையில் திங்களன்று சடலமொன்று காட்டுப் பகுதியில் கிடப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இச்சம்பவம்பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைனகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: