News Just In

9/10/2020 01:39:00 PM

மாடுகளை இறைச்சிக்கு வெட்டும் விடயம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!!


இலங்கையில் மாடுகளை அறுப்பதற்கு தடைவிதிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தௌிவுபடுத்தியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இந்த விடயம் தொடர்பான முதற்கட்ட யோசனையே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிடைக்கப்பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில் நாம் முடிவை எடுப்போம். ”  என குறிப்பிட்டார்.

No comments: