News Just In

9/24/2020 08:14:00 AM

பாதாளக் குழு குற்றங்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த ‘ரத்மலானை ரொஹா’ பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி!!


இலங்கையில் பாதாளக் குழு குற்றங்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ‘ரத்மலானை ரொஹா’ இன்று (24) அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் கொச்சிக்கடை – கம்மல்தொட்ட பகுதியில் மறைந்திருந்த போதே மேல் மாகாணத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து T 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments: