இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 400 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட நபர் ஒருவர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
4 கிலோ 500 கிராம் பெறுமதியான தங்கத்தை மோட்டார் சைக்கிள் ஒன்றில் கொண்டுச் செல்லும் போதே பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
புத்தளம், நாகவில்லு பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
No comments: