தமிழீழம் கோட்டு போராடிய சமூகத்தினை அரசியல் அநாதைகளாக்கி நடுத்தெடுவில் விட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது என மட்டக்களப்பு செங்கலடி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.உருத்திரா தெரிவித்துள்ளார்.
எமது மக்களின் அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு ஆற்றல் துணிவு மிக்க பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிப்பதன மூலம் கிழக்கு மண்ணை மாற்றுச் சமூகத்திடமிருந்து காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெருவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்க தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் அவர்கள் மாத்திரம் சலுகைகளை அனுபவித்தார்கள்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் உரிமை என்ற கோசமெழுபு;பும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாராளுமன்றம் சென்றதும் அவர்களுக்கு அங்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வதில் அக்கறைவுடன் செயற்படுகிறார்களே தவிர அரசாங்கத்துடன் பேசி மக்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் உரிமைக்காக வாக்கு கேட்டு 11 ஆசனங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பதிற்கு விரோதமாக முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்கி அழகு பார்த்தார்கள்.
2015 ஆண்டு எதிர்கட்சி தவைர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும் அவர் எமது மக்கள் சார்பாக பேசாமல் நல்லாட்சி அரசாங்கம் செய்யும் அனைத்து திட்டங்களுக்கும் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளிNயும் பூரண ஆதரவு வழங்கி நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சகல சலுகைகளையும் அனுபவித்தார்கள்.
ஓவ்வொரு தேர்தல் வருகின்ற போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியம் பேசி உரிமைக்காக வாக்கு கேட்பார்கள் ஆனால் அவர்கள் சகல சலுகைகளையும் அனுபவிப்பார்கள். ஆனால் அவர்களுக்காக வாக்களித்த மக்களின் நிலை என்ன?
தமிழ் தேசிய கூட்டமைப்பினார் தமிழ் தேசியம் பேசி வாக்கு பொற்று அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களுகு;கு செய்த துரோகத்தினால் கிழக்கு மகாhணம் மாற்றுச் சமூகத்திடம் பறிபோய்க்கொண்டிருக்கிறது இதனை தடுகப்பதற்கான முழுத் திறமையும் பிள்ளையானிடமே உள்ளது. எனN எமது மக்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுhலைப் புலிகள் கட்சிக்கு வாக்களித்து மட்டக்களப்பிலிருந்து மூன்று உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்” என்றார்.

No comments: