News Just In

8/06/2020 09:28:00 AM

வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்


பல மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய காலி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் காலை 7 மணிக்கு ஆரம்பித்துள்ளதாக மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதியம் 12 மணிக்கு காலி மாவட்டத்தின் முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல் அதிகாரிகள் வருகை தருவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வாக்கு எண்ணும் நடவடிக்கை முறையாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments: