News Just In

6/21/2020 10:47:00 PM

ஓட்டமாவடி பிரதேச பள்ளிவாசல்களில் சூரிய கிரகணத் தொழுகை


(எச்.எம்.எம்.பர்ஸான்)
நாட்டில் இன்று (21) நிகழ்ந்த சூரிய கிரகணம் காரணமாக நாட்டில் பல பகுதிகளிலும் கிரகணத் தொழுகை இடம்பெற்றது.

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது தொழுகையை நிறைவேற்ற வேண்டும் எனும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு அமைய குறித்த வணக்கம் நிறைவேற்றப்பட்டது.

அந்தவகையில், இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கான தொழுகை ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் இடம்பெற்றன.

சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி குறித்த தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(படம்: தாருஸ்ஸலாம் ஜும்ஆ மஸ்ஜித் மீராவோடை - ஓட்டமாவடி)

No comments: