கொக்கரெல்ல வெவ்சிறிகம பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதான குறித்த சந்தேகநபர் தனது வீட்டின் கட்டிலில் 06 வயதான ஆண் பிள்ளை மற்றும் 03 வயதான பெண் பிள்ளையையும் இவ்வாறு கொலை செய்துள்ளார்.
இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு வீட்டினுள் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் சந்தேகநபரின் மனைவி வீட்டில் இருக்கவில்லை எனவும், அவர் கட்டுநாயக்கவிலுள்ள வீடொன்றில் பணி புரிந்து வருகின்றமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: