News Just In

3/04/2020 12:12:00 PM

ஐஸ் போதைப் பொருள் , கஞ்சாவுடன் நால்வர் கைது!


காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்புத் தேடுதலின்போதுகஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் நால்வரைக் கைது செய்துள்ளதுடன் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொட்ருளையும் கைப்பற்றியுள்ளனரை்.

நேற்று (03) இரவு காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் வழிகாட்டலுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஈலகம திஸாநாயக்க , பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களான முகம்மட் பஸ்லான் , ரூபன் , ஆகியோர் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போதே இவர்களை கைது செய்ததுடன் இவர்களிடமிருந்து கஞ்சாவும் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கஞ்சா வைத்திருந்த இருவரும் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

No comments: