News Just In

3/06/2020 07:55:00 AM

பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக எடுத்துள்ள முடிவில் மாற்றமில்லை!!

அரச வேலைவாய்ப்புக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகளை தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதற்கு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாதென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தாம் தேர்தல் விதிகளுக்கமையவே செயற்பட்டிருப்பதாகவும், நியமனங்ளையோ, பயிற்சிகளையோ தடைசெய்யவில்லை எனவும் தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை ஒத்திவைக்குமாறு மட்டுமே கோரியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: