இந்த வைரஸ் தாக்கத்தினால் இது வரையில் அமெரிக்காவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 10 பேர் வொசிங்டன் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். வொசிங்டன் மற்றும் புளோறிடா மாநிலங்களில் தற்பொழுது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது வரையில் பதிவு செய்யப்பட்டுள்ள வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 158 ஆகும்.
வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 800 கோடி அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த வைரசின் காரணமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆகும். 84 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தற்பொழுது பரவியுள்ளது. 3,200 பேர் உயிரிழந்துள்ளனர். 95,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியாவிலேயே இந்த நோயினால் பெரும் எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 5,600 ஆகும்.

No comments: