News Just In

2/15/2020 11:15:00 AM

பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடவுள்ளார்!-அமைச்சர் தினேஸ் குணவர்தன

மக்கள் ஆணையின்படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் கையெழுத்திடவுள்ளாரென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

பாதுக்கையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 01ஆம் திகதி நள்ளிரவுடன் தற்போதுள்ள பாராளுமன்றத்தின் நான்கரை வருடங்கள் நிறைவடையவுள்ளது. இதன்படி அன்றைய தினம் நள்ளிரவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பலமான பாராளுமன்றம் அவசியம். எனவே, மக்கள் வழங்கியிருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், புதிய பாராளுமன்றத்தை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் மக்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments: