- ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறு குழந்தையின் வைத்தியச் செலவுகளுக்காக கிராம மட்ட பெண் சிறு குழு அங்கத்தவர்கள் இணைந்து சில நிமிட நேரத்தில் சுமார் 21 ஆயிரம் ரூபாவை சேகரித்து உதவு ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர்.
உணர்வுபூர்வமான இந்நிகழ்வு சனிக்கிழமை 15.02.2020 மட்டக்களப்பு-பட்டிப்பளைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட 'அருவி' பெண்கள் வலையமைப்பின் கிராம மட்ட பெண் சிறு குழு அங்கத்தவர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்றபொழுது மாற்றுத்திறனாளியான சிறு குழு அங்கத்தவர் தனது குழந்தை புற்றுநோயால் அவதியுறுவதை தெரியப்படுத்தனார்.
இதனை அறிந்து கொண்ட சக அங்கத்தவர்களான பெண்கள் உடனடியாக தலா 100 ரூபாய் சேகரித்து ஒரு சில நிமிடங்களில் 21000 ரூபாவை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வு மனதை நெகிழ வைத்ததோடு கிராமிய மக்களின் சிறு முயற்சியும் சமூக ஒற்றுமையும் பெரு வெற்றியளிக்கும் என்பதை உறுதிப்படுத்தியாக 'அருவி' பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.
2/16/2020 08:40:00 AM
Home
/
உள்ளூர்
/
பட்டிப்பளை
/
மட்டக்களப்பு
/
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிராம பெண் சிறு குழு அங்கத்தவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிராம பெண் சிறு குழு அங்கத்தவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: