News Just In

2/14/2020 03:08:00 PM

சங்ரில்லா குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு நீதிமன்றின் உத்தரவு!


உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ​ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த குண்டுதாரியின் தந்தையான மொஹமட் ஹயாது மொஹமட் ஈப்ராஹிம் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (14) கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸார் இதன்போது நீதிமன்றில் கோரியுள்ளனர்.

குறித்த கோரிக்கையை ஏற்ற மேலதிக நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments: