இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாகவும் நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்காய் நாட்டினை பசுமையால் அலங்கரித்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில்
5000 மரக்கன்றுகள் நடும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து அதில் ஈடுபட்டு வரும் அனைத்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியத்துடன் (AUMSA-All University Muslim Students Association) சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பின் (TUF STR-Technology Undergraduates’ Forum Sammanturai) மாணவர்களும் இணைந்து மரம் நடும் வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு அண்மையில் அல் - முனீர் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ. அப்துல் ஜப்பார் மற்றும் சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பின் தலைவர் வஹாப் நப்ரிஸ் ஆகியோரின் உரையோடு ஆரம்பமான இந் நிகழ்வில் நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக தேசிய கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு தாய் நாட்டிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அல் - முனீர் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பின் நிர்வாகத்தினரால் உத்தியோகத்தர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மரக் கன்றுகள் நட்டும் வைக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் சம்மாந்துறை தொழிநுட்பவியல் இளமானி மன்ற அமைப்பினரின் இவ் வேலைத் திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு அமைப்பின் தலைவரினால் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதோடு இது போன்ற சமுகத்திற்கான எழுச்சியில் அனைவரும் கைகோர்த்து நாட்டினை பசுமையாக்கும் வேலைத்திட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
"மாற்றங்கள் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும்"

No comments: