News Just In

12/28/2019 10:50:00 AM

யுத்தத்தால் கையை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத தாய்-வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி!

யுத்தத்தினால் தந்தையை தொலைத்து, கையொன்றை இழந்த தாயின் அரவணைப்பிலும், வழிகாட்டலிலும் கற்று வணிகத்துறையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமல் போன நிலையில் கையொன்றை இழந்த தாயின் அரவணைப்பிலும், வழிகாட்டலிலும் கற்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

No comments: