ஒருங்கிணைந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு நிவாரண விநியோகம் ஒருங்கிணைந்த வகையில் இணைப்பாக்கம் செய்து விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முறைகேடுகள், துஷ்பிரயோகங்கள், பாதிக்கப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு அநீதிகள் இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காக அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்களினதும், பரோபகாரிகளினதும் உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நிருவாகக் கட்டமைப்பின் கீழ் உள்வாங்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தன்னார்வத் தொண்டு உதவு ஊக்க அமைப்புக்களும் அரச நிவாரண உதவி வழங்கலோடு ஒருங்கிணைந்துள்ளன.
முனைப்பு தன்னார்வ உதவு ஊக்க தொண்டு நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு சுமார் 11 இலட்ச ரூபாய் பெறுமதியான உலருணவு நிவாரணத்தை மாவட்டச் செயலகத்தினூடாக வழங்கியதாக அந்நிறுவனத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் எஸ். சசிகுமார் தெரிவித்தார்.
தன்னார்வ அமைப்புக்களின் இணைந்த நிவாரண விநியோகம் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் மிச்நகர், மீராகேணி, ஜயங்கேணி ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட 62 குடும்பங்களுக்கு தலா 2500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் சனிக்கிழமை 27.12.2019 ஏறாவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எம். அல்அமீன் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ரமேஸ் ஆனந்தன் உட்பட அலுவலர்களும் பயனாளிகளும் நிவாரண விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments: