News Just In

12/26/2019 10:42:00 AM

கிராம மக்களிடையிலான வாய்த்தர்க்கம் கலவரமாக மாறி மோதல்-ஐவர் படுகாயம்!

இரு கிராமங்களை சோ்ந்தவா்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கலவரமாக மாறிய நிலையில் பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இராணுவம் வரவழைக்கப்பட்டு மோதல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் யாழ்.பருத்தித்துறை-கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களை சோ்ந்தவா்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்தச் சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதழனயடுத்து பொலிஸார் அங்கு சென்றும் போதும் மோதலைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனையடுத்து இராணுவம் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: