குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் (சீஐடி) இன்று (25.12.2019) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜிதவின் வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட மேலும் சில இடங்களையும் சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அதன்போது அவர் அங்கு இருக்கவில்லை எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 01.15 மணியளவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்கவின் வழி நடத்தலில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உள்ளடங்கலான பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தலைமையிலான விசாரணை குழு ராஜித்த சேனாரத்னவின் வீட்டுக்கு சென்றது.
கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழும்பு 7 இல் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜிதவின் குறித்த வீட்டில் சுமார் 20 நிமிடங்கள் வரை சி.ஐ.டி. குழுவினர் தங்கியிருந்த நிலையில், ராஜித எங்கு இருக்கின்றார் என்பதை அறிய முற்பட்டுள்ளனர். எனினும் அவர் எங்கு உள்ளார் என்பது தொடர்பில் சரியான தகவல் கிடைக்காததாலும், அவர் வீட்டில் இருக்காமையாலும் சி.ஐ.டியினர் அங்கிருந்து பிற்பகல் 1.40 மணியளவில் வெளியேறினர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜித மறைந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேலும் சில இடங்களையும் சி.ஐ.டி.யினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
12/25/2019 07:32:00 PM
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தேடி பல இடங்களில் தீவிர சோதனை!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: