News Just In

12/09/2019 07:12:00 AM

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற திரு.ரஞ்சித் சொய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (08.12.2019) அஞ்சலி செலுத்தினார்.

பூதவுடல் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரி கொடகவெலவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு நேற்று முற்பகல் சென்ற ஜனாதிபதி பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் திரு.ரஞ்சித் சொய்சாவின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறவினர்களுக்கும் அரசியல் நண்பர்களுக்கும் பிரதேச மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்.

No comments: