உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக தினத்திற்கு அமைவாக பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடிந்ததாகவும், சீரற்ற காலநிலையை கருத்தில் கொள்ளாது வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் தபால் திணைக்களத்தின் செயற்பாட்டு பிரிவின் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விநியோகிக்கப்படும் என்பதுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்து தபால் அலுவலகங்களிலும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: