மட்டக்களப்பு புனித செபஸ்தியார் தேவாலயத்தின் புளியடிக்குடா பங்கு கிறிஸ்தவ வாழ்வு சமூக அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இரத்ததான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) கிறிஸ்தவ வாழ்வு சமூக அமைப்பின் தலைவர் M.F பரணிதரன் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்தவ வாழ்வு சமூக அமைப்பின் தேசிய இயக்குனர் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளார் கலந்துகொண்டு ஆசி வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் புளியடிக்குடா பங்குத் தந்தையும், கிறிஸ்தவ வாழ்வு சமூக அமைப்பின் ஆன்மிக இயக்குனருமான அருட்பணி ரிச்சட் அடிகளார், புளியடிக்குடா பங்கு கிறிஸ்தவ வாழ்வு சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், ஏனைய பங்குகளின் மறைமாவட்ட பிராந்திய தேசிய நல்வாழ்வு சமூக சங்கத்தின் உறுப்பினர்கள், உதிரக் கொடையாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த இரத்ததான நிகழ்விற்கான அனுசரணையினை கல்வி மேம்பாட்டிற்கான அமைப்பினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
11/03/2019 05:35:00 PM
மட்டக்களப்பு புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)














No comments: