News Just In

11/04/2019 11:00:00 AM

வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் அபிவிருத்தி

வடக்கு மாகாணத்தின் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 343 வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதற்காக 51 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1034 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வீதியை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள உள்வீதி அபிவிருத்திக்காக தேசிய கொள்கை, பொருளாதார, அபிவிருத்தி, மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டு வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

No comments: