தபால் மூல வாக்களிப்பின்போது தம்மை புகைப்படம் எடுத்த 03 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் வாக்களிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11/02/2019 08:35:00 AM
வாக்களிக்கும்போது புகைப்படமெடுத்த மூன்று நபர்கள் கைது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: