News Just In

11/01/2019 11:11:00 AM

ஜனநாயக தேசிய முன்னணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள 12 கட்சிகள்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´ஜனநாயக தேசிய முன்னணி´ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட 12 முன்னணி கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுடன் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: