News Just In

10/21/2019 06:04:00 PM

வைத்தியசாலையினுள் தூக்கிட்டு இளைஞன் தற்கொலை !

வவுனியா செட்டிகுளம் பொதுவைத்தியசாலைக்குள் இளைஞரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலையின் மலசலகூடத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

No comments: