News Just In

10/21/2019 05:37:00 PM

55 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கடல் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

பாது­காப்பு அமைச்சின் மேற்­பார்­வையின் கீழ் இலங்கை கடற்­படை தொடர்ந்து பத்­தா­வது தட­வை­யா­க ஏற்­பாடு செய்­துள்ள "காலி கலந்துரையாடல்-2019" சர்­வ­தேச கடல் மாநாடு இன்று திங்கட்கிழமை (21) கொழும்பு காலிமுகத்­திடல் ஹோட்­டலில் ஆரம்பமானது.

55 நாடுகள், 12 சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மூன்று பாதுகாப்பு நிறுவனங்களைச் சேர்ந்த கரையோர பாதுகாப்பு ஆர்வலர்கள், உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு பிர­தி­நி­திகள் பலரது பங்குபற்றலுடன் "சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாக்குதல் - இந்த தசாப்தத்திற்கான மீளாய்வு " என்ற கருப்­பொ­ருளின் கீழ் இன்றும் நாளையும் இம்­மா­நாடு நடை­பெ­ற­வுள்­ளது.

No comments: