News Just In

10/22/2019 06:39:00 PM

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன



எதிர்வரும் டிசெம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி இடையிலான காலப் பகுதிக்குள் 2020 ஆம் வருடத்திற்கான துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்படி திகதிகளில் அடுத்த வருடத்திற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் டிசெம்பர் 31ஆம் திகதி பிறகு துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளின்படி, செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமெனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: