News Just In

10/08/2026 05:57:00 PM

தனியார் மருத்துவமனைக்கு ஷிரந்தி அழைத்து செல்லப்பட மாட்டார் - சிறைச்சாலை திணைக்களம்

தனியார் மருத்துவமனைக்கு ஷிரந்தி அழைத்து செல்லப்பட மாட்டார் - சிறைச்சாலை திணைக்களம்





விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவை இன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய, ஷிரந்தி ராஜபக்ச நாளை (09) தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: