அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே, மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: